`மெர்சல்' படத்தின் டீசர் வௌியான 19 மணி நேரத்தில் செய்த இமாலய சாதனை..! திணறும் சமூக வலைத்தளங்கள்.!

Friday, 22 September 2017 - 13:56

%60%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+19+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..%21+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.%21+
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் `மெர்சல்' படத்தின் டீசர் வெளியான 19 மணித்தியாலங்களில் உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே 5 இலட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் , மெர்சல் டீசர் வௌியாகி 19 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் குறைந்த நேரத்தில் ஒரு கோடி பார்வைகளை பெற்ற முதல் டீசர் என்ற பெருமையை மெர்சல் டீசர் இதன் மூலம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் , வௌியான அஜித் நடத்த விவேகம் படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 6.1 இலட்சம் பார்வைகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையயை வெறும் 5 மணி நேரத்தில் மெர்சல் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , `மெர்சல்' டீசரை இதுவரை 7 லட்சத்து 9 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் உலகளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றிருந்தது.

தற்போது அந்த சாதனையை `மெர்சல்' டீசர் முறியடித்துள்ளது.

இந்த லைக் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



விவேகம் படத்தின் டீசரை இதுவரை 5  லட்சத்து 99 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.