இலங்கை கிரிக்கட்துறையில் ஊழல்கள்!!

Sunday, 24 September 2017 - 8:02

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் ஒழிப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 
சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இதனை உறுதிசெய்துள்ளது.
 
இதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை இலங்கைக்கு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் ஊடாக சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கை கிரிக்கட்துறையில் ஊழல்கள் இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையொன்று காணப்படுவதாக சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.
 
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கட் வீரர்கள் 40 பேர் அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.