சர்வதேச ஒருநாள் தரவரிசை பட்டியலில் மாற்றம்

Monday, 25 September 2017 - 8:34

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றிக்கொண்டுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் தரவரிசையில்  இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இந்துரில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரோன் ஃபின்ஞ் 124 ஓட்டங்களை பெற்றார்.

பதலளித்த இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி தற்போதைய நிலையிலேயே 3க்கு பூச்சியம் என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியினை அடுத்து இந்திய அணி சர்வதேச தரப்படுத்தலில் முதலிடம் பெற்றுள்ளது.

அந்த பட்டியலில் தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் காணப்படுகின்றன.

இலங்கை அணி 8வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.