தேங்காய் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Tuesday, 26 September 2017 - 13:31

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கையில் தேங்காய் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யாக்கந்தவல இதனைத் தெரிவித்துள்ளார்.
 
சந்தையில் தேங்காய் 70 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும்.
 
எனினும் சில வர்த்தகர்கள் அதனை 75 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த விலையைக் கட்டுப்பாட்டில் பேணுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.