மோடியுடன் இணைய தயார் - கமல்

Tuesday, 26 September 2017 - 20:35

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக்கட்சியுடன், இணைந்து அரசியலில் ஈடுபட தாம் தயார் என்று தமிழக முன்னணி நடிகர் ஸ்ரீனிவாசன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் எந்த தீண்டாமை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ரஜனிகாந்த்துக்கு போட்டியாக  அல்ல, பொதுமக்களின் நலனுக்காகவே தாம் அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கமல்ஹாசன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை அடுத்து கமல்ஹாசனின் அரசியல் பிரவேச முனைப்புக்கள் தீவிரமாகியுள்ளன.

இதற்கான களமாக தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள கமல்ஹாசன், ரஜனிகாந்த் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பதற்காக தாம் அரசியலில் ஈடுபட தீர்மானிக்கவில்லை.

மக்களுக்கு தேவை என்பதற்காகவே தாம் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் என்ற எம்.ஜி.ராமசந்திரன், என்.டி.ராமராவ் என்ற வெற்றியாளர்களின் வழியிலேயே தனிக்கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீனிவாசன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசியலில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதால் பாரதீய ஜனதாக்கட்சியுடனும் கைகோர்த்து செயற்பட தயார் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.