Hirunews Logo
%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21
Thursday, 12 October 2017 - 14:38
ஒற்றர்களுக்கு கையூட்டல் வழங்கிய பெர்பெச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் - வௌியான தகவல்!
29

Shares
3,593

Views
அரச நிதி நிறுவனங்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக தமது ஒற்றர்களுக்கு பெர்பெச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் கையூட்டல் வழங்கியதாக மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தகவல் வெளியானது.

பெர்பெச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் கையூட்டல் வழங்கியமை தொடர்பிலான அறிக்கையை நிறுவனத்தின் பிரதான முகவர் அதிகாரி ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, அர்ஜூன் அலோசியஸின் தனிப்பட்ட செயலாளர் அவசர சிகிச்சைபெற்றுவரும் நிலையில், அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்தார்.

இதனால், பர்பெச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் ஆவணங்கள் குறித்த வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாதென சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே அர்ஜூன் அலோசியஸின் தனிப்பட்ட செயலாளரின் உடல்நிலை தேரியவுடன் முன்னிலைப்படுத்துமாறு ஆணைக்குழு தெரிவித்தது.

இதேவேளை, இன்றைய தினம் அர்ஜூன் மகேந்திரன் இறுதியாக தமது சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைகளுக்கான வாக்குமூலங்களை வழங்கினார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அர்ஜூன் மகேந்திரன், தாம் மத்தியவங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் சர்வாதிகார போக்கில் செயற்படவில்லையெனவும், அதிகாரிகளின் ஆலோசனைகளுடனேயே செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
280 Views
12 Views
5,375 Views
8,568 Views
453 Views
13,042 Views
Top