Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 12 October 2017 - 15:18
இந்திய கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் கைது
8

Shares
974

Views
இந்தியாவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர், இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த 10 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது இலங்கையில் 47 இந்திய கடற்றொழிலாளர்குள் தடுப்பில் உள்ளனர்.

இதேவேளை, நாளையதினம் டெல்லியில் இந்திய- இலங்கை கூட்டுக் கடற்றொழில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்காக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று இன்று இந்தியா செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,973 Views
14,840 Views
518 Views
2,586 Views
1,009 Views
16,296 Views
Top