Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Thursday, 12 October 2017 - 16:47
வறுமையை போக்க சவுதி அரேபியா சென்ற தனது மகள் சவப்பெட்டியிலேயே நாடு திரும்பினார்- அழுது புலம்பும் தந்தை (படங்கள்)
14,909

Views

சவுதி அரேபியாவில் சுமார் இரண்டு வருடங்கள் பணியாற்றிய வீட்டிற்கே மீண்டும் சென்ற தனது மகள் ஆறு மாதத்தின் பின்னர் சவப்பெட்டியிலேயே நாடு திரும்பியுள்ளார் என பசறை பகுதியில் வசிக்கும் செல்ட்டன் அல்விஸ் நீர்கொழும்பு வைத்தியசாலையில் கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.

தனது மகள் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர் சவுதி அரேபிய நாட்டின் காவல்துறை உத்தியோகத்தர் எனவும் அவர் வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் அவரின் தந்தை அறிவித்துள்ளார்.

அத்துடன் தனது மகளின் விரல்கள் வெட்டப்பட்டு நெருப்பினால் சூடு வைத்து எரிக்கப்பட்ட அடையாளங்களுடன் புகைப்படம் ஒன்று குறிதத பெண்ணினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் வெளிநாடடு வேலைவாயப்பு பணியகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இலக்கம் 25 அத்கம் இல்லம் அரலியகொடை பசறை என்ற முகவரியில் வசிக்கும் 36 வயதுடைய பிரியங்கா தினுசி பிரியங்கா அல்விஸ் என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா தனது கணவருடன் முரண்பட்டுக்கொண்டு தந்தையுடன் இரு பிளைகளையும் பராமரித்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் தமாம் நகரிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

சுமார் இரண்டு வருடங்கள் கடமையாற்றிய பின்னர் நாடு திரும்பிய பிரியங்கா ஒரு மாதம் தனது இல்லத்தில் பிள்ளைகளுடன் நாட்களை கடத்தி மீண்டும் அதே வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

சென்றதன் பின்னர் இரண்டு மாதங்கள் தனது பிள்ளைகளின் செலவீனத்திற்காக பணம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் தொலைபேசி அழைப்புகளை அவர் மேற்கொள்ளவில்லை எனவும் பிரியங்காவின் தந்தை தெரிவிக்கின்றார்.

பிரியங்காவை சவுதிஅரேபியாவிற்கு அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் கடந்த 8 ஆம் திகதி பிரியங்கா இறந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் விமானம் மூலம் பிரியங்காவின் சடலம் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

සීදුව - ප්‍රසාද් මුතුකුඩ

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top