Hirunews Logo
%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 October 2017 - 16:53
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துஷாரவிற்கு இடமாற்றம்
70

Shares
8,457

Views
அம்பாந்தோட்டையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்ட்ட ஆர்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கிய தங்காலை உதவி காவல்துறை அத்தியட்சகர் துஷார தழுவத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மத்தல விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்க திட்டமிடுகின்றது என தெரிவித்து கடந்த 9 ஆம் திகதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சிரேஷ்ட்ட அத்தியட்சகர் துஷார தழுவத்த இளைஞர் ஒருவரை தாக்குவது காணொளி மூலம் ஊடகங்களில் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

ஊடகவியலாளரை தாக்கிய காவற்துறை உத்தியோகத்தர் மீது அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது என வினவப்பட்டது.

ஊடகவியலாளர் ஊடவியல் வேலைக்காக ஆர்பாட்டத்திற்கு வரவில்லை மாறாக பதாதை (போஸ்ட்டர்) காட்சிபடுத்தவும் ஆர்பாட்டம் மேற்கொள்வதற்குமே வருகை தந்திருந்தார்.

எந்த தொழிலை செயபவராயினும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றால் ஆர்பாட்டக்கார்களில் ஒருவராகவே கருதப்படும் என அறிவித்திருந்தார்.

எனினும் தாக்கிய செயல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
21 Views
10,680 Views
58 Views
1,425 Views
323 Views
12,300 Views
Top