Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
Thursday, 12 October 2017 - 18:59
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
8

Shares
1,039

Views
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்கான நியமனங்களை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவிற்கு அனுப்பிவைக்கப்பட் கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொடர்ச்சியான கோரிக்கைகளின் பலனாக 1700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்தது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக 254 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

மீதமுள்ள 1446 பேருக்கான நியமனங்களை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னடுத்தபோதும் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக பட்டதாரிகள் தொடர்ந்தும் நியமனங்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படுமாயின் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மேலும் கால தாமதமாவதற்கு வாய்ப்பு உள்ளமையால் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
382 Views
159 Views
5,383 Views
8,665 Views
492 Views
13,191 Views
Top