Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Friday, 13 October 2017 - 8:26
ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார்
294

Views
ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி ஃக்ரிப் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று கிளிநொச்சியில் சந்தித்தார்.
 
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நேற்று இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
இந்த நிலையில், நேற்று வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தார்.
 
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான தம்முடன்  கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்டவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதற்குப் பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, இப் போராட்டத்தை தாம் மதிப்பதாக கூறியுள்ளார்.
 
குறித்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்துடன் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட அவர்,  கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து கலந்துரையாடினர்
 
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் தாங்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கு சென்ற  ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, அப்பகுதியை பார்வையிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு பணயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு 20 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
568 Views
HiruNews
HiruNews
HiruNews
6,605 Views
HiruNews
HiruNews
HiruNews
5,360 Views
HiruNews
HiruNews
HiruNews
10,729 Views
HiruNews
HiruNews
HiruNews
66 Views
HiruNews
HiruNews
HiruNews
38,769 Views
Top