கொழும்பில் காணி விலைகள் அதிக அளவில் அதிகரிப்பு

Sunday, 15 October 2017 - 14:05

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் காணி விலைகள் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மட்டும் 36 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய வீட்டு விலைச்சுட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது தவிர நாடளாவிய ரீதியாகவும் காணி விலைகள் கடந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பங்கு சந்தை, சேமிப்பு மற்றும் முறிகள் போன்றவற்றில் முதலீடு செய்வதை விட காணி வாங்கி விற்கும் வர்த்தகத்தின் மூலம் அதிக வருவாயை பெற முடியும் என பொருளாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 1, 3 மற்றும் 7 ஆகிய வலயங்களில் ஆதனங்களின் விலை மிக அதிகமாக உள்ள நிலையில், கொழும்பு 9, 13, 14 மற்றும் 15 ஆகிய வலயங்களில் ஆதனங்கள் குறைந்த பெறுமதியினை வெளிப்படுத்துகிறது.

அதேவேளை, ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள கொழும்பு 1 இல் ஒரு பேர்ச் விஸ்தீரணமான காணி 3 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கொழும்பு நகரத்துடன் மேலதிகமாக 269 ஹெக்டயர் விஸ்தீரணமான காணி இணைக்கப்படவுள்ளது.

மேலதிகமாக இணைக்கப்படும் காணி அடுத்த வருடம் முதல் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.