ஜூலியா? காயத்ரியா? - மனம் திறந்த ஓவியா!!

Monday, 16 October 2017 - 9:36

%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21%21
ஒரே ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்தை பெற்று விட்டார் ஓவியா, இவருடைய சினிமா வாழ்க்கையும் தற்போது செமயாக மாறி விட்டது.

மேலும் ஓவியா ரசிகர்களை சந்திப்பது, பேட்டிகளை கொடுப்பது என இன்னொரு பக்கம் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது இவரிடம் நீங்கள் ஒரு நாள் செலவிட வேண்டுமென்றால் காயத்ரி, ஜூலி இவர்களில் யாருடன் செலவிட விரும்புவீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு ஓவியா, நான் காயத்ரியுடன் இருக்க ஆசைப்படுவேன், ஏனென்றால் அவர் என்னை நன்றாக பார்த்து கொள்ளுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.