இந்திய அணியின் பிரபல வீரரின் கனவு கலைந்தது!

Wednesday, 18 October 2017 - 11:51

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டார் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஶ்ரீ சாந்திற்கு தொடர்ந்து வாழ்நாள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டார் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அவருக்கு கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாழ்நாள் தடையை விதித்திருந்தது.

எனினும் , அதனை எதிர்த்து  மேன்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஶ்ரீசாந்த் , தாம் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை என்பதோடு , மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்குமாறும் மனுவின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் , இந்த மனுவை பரிசீலித்த தனி நீதிபதி கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கினார்.

எனினும், குறித்த தீர்ப்பிற்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை மீண்டும் கேரள உயர்நீதிமன்றில் மனுவினை தாக்கல் செய்ததற்கமைய அவருக்கு விளையாடுவதற்கான வாழ்நாள் தடையை தொடர்ந்தும் நீடித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஶ்ரீசாந்த் , கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமான முடிவு என தெரிவித்துள்ளதோடு உண்மையான குற்றவாளிகளை யார் தண்டிப்பது எனவும் , தனக்கு மாத்திரம் தனிச்சட்டமா எனவும் தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் ஒன்றின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.