தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகள் (காணொளி , படங்கள் இணைப்பு)

Wednesday, 18 October 2017 - 12:17

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%2C+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29

உலகெங்கும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகையினை மிக விமர்சையாக இன்றைய தினம் கொண்டாடுகின்றனர்.

இந்த தீபாவளி பண்டிகையினையொட்டி நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

நரகாசூரன் என்ற அரக்கன் தம் நாட்டு மக்களை கொடுமைபடுத்தி மிகவும் சித்தரவதை செய்து வந்தான் இதனால் தாங்க முடியாத மக்கள் கிருஸ்ண பரமாத்விடம் முறையிட்டனர்.

அவனை  வதம் செய்த நாளாகவே தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகின்றது.

அந்த இருண்ட யுகத்தினை நினைவு கூர்ந்தே இந்த தீபாவளி திருநாளில் தீபங்கள் வரிசையாக ஏற்றப்படுகின்றன.

இதன் மூலம் தமது உள்ளத்தில் உள்ள இருள் அகன்று ஒளி பிறக்கும் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

இதனையொட்டி இன்றையதினம் இந்துக்கள் அனைவரும் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து வாசலில் தீபங்கள் வரிசையாக ஏற்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தீபத்திருநாளினையொட்டி மலையக ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இன்று தீபாவளி திருநாளினையொட்டி விசேட பூஜைகள் பாலசுப்பிரமணிய சர்மா தலைமையில் நடைபெற்றன.

இதில் விநாயகர் வழிபாடு, லக்ஷ்மி வழிபாடு, குபேர பூஜைகள் உட்பட நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி விசேட தீபாவளி பூஜைகள் இடம்பெற்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான இந்துக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.