விலை அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

Wednesday, 18 October 2017 - 13:15

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
உடன் நடைமுறைக்கு வரும் வகையில், விலை அதிகரித்துச் சென்றுள்ள பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 
வாழ்க்கை செலவு குழுவுக்கு ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
 
நேற்று இடம்பெற்ற குழு கூட்டத்தின் போது, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்ததாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
 
அதன்படி, அரிசி, மீன் வகைகள், கருவாடு, நெத்தலி மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்து கூட்டுறவு மற்றும் சதோச ஊடாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 
வாழ்க்கைச் செலவு வீதம் அதிகரித்துச் சென்றுள்ளதாக நேற்று இடம்பெற்ற குழு கூட்டத்தின் போது அமைச்சர்கள் பல சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
அத்துடன், வாழ்க்கை செலவை குறைப்பதன் பொருட்டு அமைக்கப்பட்ட குழுவினால் எந்த பலனும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.