எதிர்வரும மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெறும்..!

Wednesday, 18 October 2017 - 15:02

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
பாகிஸ்தானுடனான எதிர்வரும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிப்பெறும் வாய்ப்பு நிலவுவதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியில் , இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியிருந்த போதும் , துப்பாட்ட வீரர்கள் உரிய முறையில் பிரகாசிக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் , எதிர்வரும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்தரமே இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியும்.

இதன் காரணமாக , எதிர்வரும் மூன்று போட்டிகளும் இலங்கை வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு அபுதாபில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை , இன்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் தில்வெல்ல 88 ஓட்டங்களைப் பெறுவாராக இருந்தால், அவர் 1000 ஒருநாள் ஓட்டங்களை கடப்பார்.

26வது இன்னிங்ஸில் விளையாடவுள்ள நிரோசன் டிக்வல்ல இன்று 1000 ஓட்டங்களை கடக்கும் பட்சத்தில், இலங்கை சார்பில் அதிக வேகமாக 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் பதிவு செய்தார்.

இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தமையே சாதனையாக இருக்கிறது.

இந்நிலையில் , இலங்கை அணிக்கு எதிரான டீ 20 போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.

16 வீரர்கள் கொண்ட இந்த குழாமின் தலைவராக சஃப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் , இந்த குழாமில் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதன்படி , சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர்) , பாஃகர் சமான் , அஹமட் ஷெசாட் , பாபர் அஷாம் , சொய்ப் மலிக் , மொஹமட் ஹாபீஸ் , ஹிமட் வசீம் , ஷாதப் கான் , மொஹமட் நவாஸ் , ஹசான் ஹலி , பாஹிம் அஸ்ரப் , மொஹமட் நவாஸ் , அஹமட் யமன் , ருமன் ரைஸ் , உஸ்மான் ஷின்வாரி மற்றும் உமர் ஹமீன் ஆகிய வீரர்கள் இந்த குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , இந்த போட்டித் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் , இலங்கை அணியின் அணித்தலைவராக சகலதுறை வீரர் திசர பெரேரா நியமிக்கப்படுவார் என இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.