மெர்சல் திரைப்படம் – திரைப்பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்..? – வாங்க பார்க்கலாம்

Wednesday, 18 October 2017 - 21:11

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%3F+%E2%80%93+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

இன்று வெளியான மெர்சலுக்கு திரைப் பிரலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் மெர்சல் ட்வீட்டுகள் இவை:

சமந்தா: மெர்சல் டீமுக்கு வாழ்த்துகள். எல்லோருக்கும் இது ஒரு மெர்சல் தீபாவளி. செம..செம..செம.. ஏ.ஆர்.முருகதாஸ். ஆல் த பெஸ்ட் மெர்சல். அட்லீ, விஜய், தேனாண்டாள், சூப்பர் ஹிட் ஆக இருக்கும்.

ஆதவ் கண்ணதாசன்: சொல்ல வேண்டிய மெசேஜை சூப்பராக சொல்லி இருக்கீங்க பிரதர். இது கமர்ஷியல் ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள தளபதி படம்.

தனுஷ்: மெர்சல் டீமுக்கு ஆல் த பெஸ்ட். குட் லக் விஜய் சார்.

சுசிந்தீரன்: அம்மா மற்றும் மனைவி குழந்தைகளோடு இன்று படம் பார்த்தேன். முதல் பகுதி சூப்பர். ஷோபி மாஸ்டர் நடனம் மற்றும் விஜய் மிக அருமை

அசோக் செல்வன்: இன்று மிஸ் பண்ணிட்டேன். விரைவில் படத்தை பார்த்துவிடுவேன். வாழ்த்துகள்

ராகவா லாரன்ஸ்: இந்தப் படம் உலக அளவில் ப்ளாக் பஸ்டர் வெற்றி

குஷ்பு: நாலு டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். நாளைதான் குடும்பத்தோடு போகப் போகிறோம். வாழ்த்துகள்

கவுதமி: மெர்சல் மிக சிறந்த தீபாவளி வெற்றி. என் வாழ்த்துகள்

செளதர்யா ரஜினிகாந்த்: இன்று வெளியான மெர்சல் படத்திற்கு.. விஜய் அண்ணா ஆல் த பெஸ்ட்

விஜய் சேதுபதி: பிரான்ஸில் மெர்சல் பார்த்தேன். தமிழ்நாட்டில் பார்க்க முடியாமல் போய்விட்டது. விஜய் சார் தாறுமாறு..மிரட்டல். அட்லீ சூப்பர் ஒர்க் வாழ்த்துகள்

சிவகார்த்திகேயன்: மெர்சல் டீம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.

சாந்தனு பாக்யராஜ்: இந்த அன்பான ரசிகர்களை சம்பாதித்த விஜய் அண்ணாவின் மெர்சலுடன் இன்று செலவழித்து உள்ளேன். கத்தி கத்தி தொண்டையே வறண்டு போய் விட்டது.

கலையரசன்: மெர்சல் மிகப்பெரிய… மிகப்பெரிய வெற்றி.