கந்தகாரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் பலர் பலி

Thursday, 19 October 2017 - 20:36

%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தான் தென் மாகாணமான கந்தகாரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் குறைந்தது 43 ஆப்கானிஸ்தானிய இராணுவத்தினர் பலியாகினர்.

இது தவிர 9 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காணாமல் போய் உள்ளதாக ஆப்கானிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ முகாமொன்றை குறிவைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

வெடிபொருள் நிரப்பிய இரண்டு பாரஊர்திகள் மூலம் இராணுவ முகாமொன்றை தாக்குதல்தாரிகள் தாக்கியுள்ளனர்.

இந்தநிலையில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் 10 பேரும் பலியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வாரத்தினுள் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மூன்றாவது பாரிய தாக்குதல் இதுவென ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு தாலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.

அதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 150 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.