பாகிஸ்தான் அபார வெற்றி!!

Friday, 20 October 2017 - 22:07

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21%21
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சார்ஜாவில் இடம்பெறும் இந்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் , இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

நிரோஷன் திக்வெல்ல 22 ஒட்டங்களையும் , சுரங்க லக்மால் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மற்றைய அனைத்து வீரர்களும் 20 ஓட்டங்களையும் விட குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் ஹசான் அலி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஹிமாட் வசீம் , சதாப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

இதில் , சொய்ப் மலிக் மற்றும் பாபர் அஷாம் ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் தலா 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.