கடத்தப்பட்ட பெண்.. ; 2 வருடங்களின் பின்னர் மீட்பு ..

Saturday, 21 October 2017 - 17:34

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F++%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D..+%3B+2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+..+
அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர்  ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின் மீட்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தனியார் பத்திரிக்கையில் பணிபுரிந்துவந்த ஜீனத் ஷாஜாதி என்ற பெண் கடந்த 2015 ம் ஆண்டு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவின் மும்பையை சேர்ந்த பொறியியலாரான, ஹமித் அன்சாரி என்பவர் பாகிஸ்தானினுள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அவருக்கு ஆதரவாக ஜீனத் ஷஜாதி வழக்கு தொடர்ந்தபோது, அவருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

இதனை அடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

இந்த கடத்தல் தொடர்பில் தொட்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், ஜீனத் ஷஜாதியை பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.