குடும்பம் ஒன்றின் மாதாந்த சராசரி வருமானம் அதிகரிப்பு

Sunday, 22 October 2017 - 9:21

+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களின் வருவாய் தொடர்பான குடித்தன மதிப்பீட்டு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதாந்த சராசரி வருமானம் 62 ஆயிரத்து 237 ரூபாவாக அமைந்துள்ளது.

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 35.7 சதவீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதாந்த வருவாய் 15 சதவீத அதிகரிப்பை பதிவுசெய்திருந்தது.

மதீப்பீடு செய்யப்பட்ட குடிததனங்களின் சராசரி மாதாந்த வருமானமானது, கிராமம் நகரம் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கிராமத்தில் குடும்பம் ஒன்றின் வருமானம் 58ஆயிரத்து 137 ரூபாவாகவும் நகர குடும்பம் ஒன்றின் வருமானம் 88ஆயிரத்து 692 ரூபாவாகவும் உள்ள அதேவேளை, தோட்டப்புற குடும்பம் ஒன்றின் சராசரி வருமானம், வெறும் 34 ஆயிரத்து 804 ரூபாவாக அமைந்துள்ளது.