சைட்டத்திற்கு எதிராக சாகும் வரை உணவு தவிர்ப்புக்கு தயாராகும் பெற்றோர்!

Sunday, 22 October 2017 - 20:05

%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%21
சைட்டம் தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தீர்வு ஏற்றுக்கொள்ளும் படியாக அமையாத விடத்து அதனை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் 250 பேர் சாகும்வரை உணவுத்தவிர்பில் ஈடுப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் அடுத்தே அவர்கள் இதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
 
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரம் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
எனவே பெற்று கொடுக்கப்படும் தீர்வு ஏற்றுக்கொள்ளும் படி அமைய வேண்டும் என அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.
 
அதனை விடுத்து தேவையற்ற தீர்வுகளை தாம் எதிர்ப்பார்க்க வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.