நவம்பரில் ஆரம்பமாகவுள்ள இலங்கை - இந்திய தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

Monday, 23 October 2017 - 11:32

%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D

இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி தலைவர் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி இந்த வருடம் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்.

இலங்கை அணி நவம்பர் 16ஆம் திகதி முதல் டிசம்பர் 24ஆம் திகதி வரையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரீ20 போட்டிகளில் இந்தியாவில் விளையாடவுள்ளது.

இந்தநிலையில், டிசம்பர் – ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தொடருக்கு தயாராகும் வகையில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிராக 20க்கு 20 போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இன்று தெரிவு செய்யப்படவுள்ளன.

இதன்பொருட்டு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இன்று கூடவுள்ளது.