Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 14 November 2017 - 12:41
இலங்கை அணியின் சகலதுறை வீரருக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட மாத்திரமே வாய்ப்பு
24

Shares
2,907

Views
மெத்தியூஸிற்கு துடுப்பாட மாத்திரமே வாய்ப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடுவதற்கு அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக எஞ்சலோ மெத்தீவ்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் உபாதை குணமடைந்துள்ள போதிலும் அவரால் களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சில் ஈடுபட முடியாது என இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர், ருமேஷ் ரத்நாயக்க தெரிவித்தார்.

பந்து வீச்சின் போது எஞ்சலோ மெத்தீவ்ஸ் இற்கு பதிலாக தசுன் சானக, தனஞ்சய டி சில்வா, ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி  இந்திய அணியுடன் இறுதியாக 2009 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் போட்டியில் டெஸ்ட்  விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு சாதனையொன்றை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் இந்தியா அணி 21 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்துள்ளது அதனை முறியடைக்கும் வாய்ப்பே விராட் கோஹ்லிக்கு தற்போது கிடைத்துள்ளது.

சவுரவ் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள நிலையில் அதில் 21 போட்டிகளில் இந்தியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் , இதுவரை 29 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள விராட் கோஹ்லி 19 போட்டிகளில் இந்தியா அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.

அதன்படி , எதிர்வரும் இலங்கை இந்திய டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெறும் பட்சத்தில் கங்குலியின் சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பார்.

விராட் கோஹ்லிக்கு முன்னர் , இந்தியா அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் மகேந்திர சிங் தோனி 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள நிலையில் , அதில் 27 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.

எனினும் , வெற்றி சதவீதத்தில் விராட் கோஹ்லியே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ம் திகதி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
485 Views
10,240 Views
14 Views
1,144 Views
246 Views
11,842 Views
Top