Hirunews Logo
%E2%80%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Wednesday, 15 November 2017 - 9:38
​பாகுபலியாக மாற நினைத்த இளைஞருக்கு நேர்ந்த கதி - காணொளி
14

Shares
1,784

Views
பாகுபலி பிரபாஸாக மாற நினைத்து வீரதீர செயலில் இறங்கிய இளைஞர் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.

இந்த ஆண்டின் மாபெரும் வெற்றித் திரைப்படமாகவும், இந்திய சினிமா வரலாற்றில் மகுடமாகவும் அமைந்தது பாகுபலி இரண்டாம் பாகம். இதில் பாகுபலியாக நடித்த நடிகர் பிரபாஸ் பல சாகசங்கள் புரிந்திருப்பார். 

பிரபாஸின் சாகசங்களில் யானை மீது கம்பீரமாக நிற்கும் காட்சி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட காட்சிகளுள் ஒன்றாகும்.

இதனைப்போன்றே தானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட கேரளாவின் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள வளர்ப்பு யானை ஒன்றைக்கொண்டு தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணியதோடு, தனது பேஸ்புக்கில் இதனை லைவ் செய்யவும் தீர்மானித்தார்.

இதற்காக தனது நண்பரை சற்று தொலைவில் இருந்து காணொளி எடுக்க கூறிவிட்டு முதலில் அந்த யானைக்கு பழங்கள் உள்ளிட்ட உணவுகளை கொடுத்து நண்பராகும் முயற்சியில் ஈடுபட்டார் அந்த இளைஞர்.

பின்னர் யானை தன்னிடம் சகஜமாக பழகுவதாக நினைத்த அந்த இளைஞர், அதன் தந்தத்தை பிடித்து மீது ஏற முயற்சித்த போது திடீரென அந்த இளைஞரை முட்டித் தள்ளி தூக்கி எரிந்தது.

சில அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர் தலைகுப்புற தரையில் விழுந்தார். அசைவுகள் அற்ற நிலையில் தலைகுப்புற விழுந்து கிடந்த இளைஞரை அவரின் நண்பர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சையில் உள்ள இளைஞர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

இளைஞரின் இந்த விபரீத செயல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞரின் இந்த செயல் இதைப்போன்று விபரீத ஆசை கொண்டோர்க்கு பாடமாக அமைந்துள்ளது. 


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
167 Views
HiruNews
HiruNews
HiruNews
6,247 Views
HiruNews
HiruNews
HiruNews
5,222 Views
HiruNews
HiruNews
HiruNews
10,276 Views
HiruNews
HiruNews
HiruNews
307 Views
HiruNews
HiruNews
HiruNews
38,322 Views
Top