Wednesday, 15 November 2017 - 10:11
வீடு ஒன்றில் நடந்துள்ள பதறவைக்கும் சம்பவம்..!
அத்துருகிரிய பிரதேச வீடு ஒன்றில் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் தனது மனைவிக்கு தெரியாமல் வாடகைக்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்து இவ்வாறு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த வீட்டுக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வாடகை கொடுப்பனவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டின் வாடகை காலம் நிறைவடைய இருந்துள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் கடந்த 13 ஆம் திகதி வீட்டின் பார்வையிட வந்துள்ள நிலையிலே, குறித்த நபர் வீட்டின் அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை அறியவந்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நபர் வாடாகை வீட்டில் யாருடனாவது வாழ்ந்திருக்க கூடும் என சந்தேகிப்பதாக மனைவி காவற்துறையிடம் வாக்கமூலம் அளித்துள்ளார்.
குறித்த வர்த்தகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில், " கடிதத்தில் தான் பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாமல் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாக " எழுதி வைத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.