முல்லைத்தீவு – மணலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஜொனீ வகை மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து 41 ஜொனீ மிதி வெடிகளும், அவற்றுக்காக 19 வெடிப்பிகளும் மீட்கப்பட்டுள்ளன.