Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+4+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 15 November 2017 - 10:46
யாழில் 2 மணி நேரத்துக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பலால் அட்டூழியம்
14

Shares
1,732

Views
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு(14) 7.00 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டு சம்பங்கள் இடம்பெற்றுள்ளன.

மானிப்பாய் - சங்குவேலியில் நேற்று இரவு 7.00 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த நான்கு பேரும், யாழ்ப்பாண போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், ஒருவரை வெட்டியதுடன் அங்கிருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியுள்ளது.

4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத நபர்கள் 10 பேர் இதன்போது வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பலின் வாள்வெட்டு இலக்காகிய ஆனைக்கோட்டை - லோட்டஸ் வீதியைச் சேர்ந்த நபரொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதனிடையே கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவுள்ள உணவகத்துக்குள் நேற்று இரவு(14) 8.20 மணியளவில் புகுந்த கும்பல், அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த நபரொருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், நல்லூர் - முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
396 Views
3,430 Views
5,666 Views
11,401 Views
65 Views
4,967 Views
Top