இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
50க்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, எசோசியேட் ப்ரஸ் நடத்திய ஆய்வின் போது, ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் சாட்சியளித்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் பாதுகாப்பு மீளமைப்புக்காக பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கம் செய்வதானது, வினைத்திறனாக அமைகிறதா? என்ற கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.