Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 15 November 2017 - 13:19
சிம்பாப்வே இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
2

Shares
244

Views
சிம்பாப்வே, இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
 
எனினும், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரோபோட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
சிம்பாப்வேயின் அரச தொலைக்காட்சி நிலையம் கைப்பற்றப்பட்டதன் பின்னர், முகாபேயுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளவர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பாக சில தகவல்களை தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா, ரோபோட் முகாபேயுடன் தாம் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.
 
தாம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரோபோட் முகாபே தம்மிடம் கூறியதாகவும் ஜேகப் சூமா தெரிவித்துள்ளார்.
 
எனினும், தாம் நலமாக உள்ளதாக அவர் கூறியதாகவும்,  ஜேகப் சூமா குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னர் ரோபோட் முகாபேயினால் பதவியில் இருந்து விலக்கப்பட்ட பிரதி ஜனாதிபதி எமசன் நன்காவினை சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் தொடர்ச்சியாக தலைநகர் ஹரரேயில் எரிகணை தாக்குதல்கள் இடம்பெறுவதாக அங்கு நிலை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதல் சிம்பாப்வேயின் தனிப்பெரும் தலைவராக 93 வயதான ரோபோட் முகாபே செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
21 Views
10,680 Views
58 Views
1,425 Views
323 Views
12,300 Views
Top