ரஷ்யா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது

Saturday, 18 November 2017 - 12:45

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதா என்பது தொடர்பான விசாரணைகளை நீடிக்க ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை ஒன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டது.

குறித்த விசாரணைக்கான காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குவரவிருந்தது.

எனினும், அதனை மேலும் ஒரு மாதத்தால் நீடிப்பதற்கான யோசனையை ஜப்பான் முன்வைத்தது.

இந்த யோசனைக்கு எதிராக ரஷ்யா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டது.