இந்தியா 49 ஓட்டங்களால் முன்னிலை

Monday, 20 November 2017 - 7:27

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+49+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர நிறைவு வரையில் ஒரு விக்கட்டை இழந்து 171 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியில் இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 172 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதுலாவது இனிங்சிற்காக 294 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

அதன்படி, இந்திய அணி தமது இரண்டாவது இனிங்சில், 9 விக்கட்டுக்களை கைவசம் உள்ள நிலையில் 49 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.