கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகை

Monday, 20 November 2017 - 8:48

%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்த வித்யுலேகா, தற்போது உடல் எடையை குறைத்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமின் மகள். கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த கௌதம் மேனனின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தில் ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். 

இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

மிகவும் குண்டாக இருந்த இவர் சில காலமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.