இலங்கை இந்திய டெஸ்ட் - இரண்டு பிரபல வீரர்கள் நீக்கம் / குழாமில் இணைந்த 2 தமிழர்கள்!

Tuesday, 21 November 2017 - 7:27

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%2F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+2+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
இலங்கை அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் புவனேஸ்வா் குமார் மற்றும் சிக்கார் தவான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் இருவரும் தனிப்பட்டக் காரணங்களை முன்வைத்து விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவர்கள் இந்த போட்டிகளுக்கு உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி புவனேஸ்வர் குமார் எதிர்வரும் 2 போட்டிகளிலும் விளையாட மாட்டார்.

ஆனால் சிக்கார் தவான் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பார் என்றும், ஆனால் அணித் தேர்வாளர்களே அவர் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சகலதுறை வீரர் விஜய் சங்கர் இணைக்கப்படவுள்ளார்.
 
அதேநேரம் தவானுக்கு பதிலாக முரளி விஜயும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
அதேநேரம் முதல் போட்டிக்குப் பின்னர் இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதும், அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
இதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய குழாமில், KL Rahul, Murali Vijay, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rohit Sharma, Wriddhiman Saha (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Kuldeep Yadav, Mohammed Shami, Umesh Yadav, Ishant Sharma, மற்றும்  Vijay Shankar ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.