ஐ.பி.எல் ஏலம் ஆரம்பிக்க முன்னர் வெடித்துள்ள சர்ச்சை

Wednesday, 22 November 2017 - 17:54

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88
அடுத்த வருட இந்தியன் பிரிமியர் லீக் தொடர்பான வீரர்களின் ஏலத்திற்கு இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில் அணிகளுக்குள் உள்வாங்குத் வீரர்கள் தொடர்பில் இதுவரை இணக்கம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கும், ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலின் போது இது தொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வீரர்களின் ஏலம் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஷாருக்கான், ஜோ மேத்தா, ஆகாஸ் அம்பானி, நெஸ் வடியா மற்றும் மொஹிதீன் பர்மான் உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய கட்டுப்பாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் இம்முறை ஐ.பி.எல் ஏலம் நடத்தப்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனுடன் இதற்கு முன்னர் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை அடுத்த வருட தொடருக்காக அணியில் தக்கவைத்துக் கொள்வதற்காக கிடைக்கும் வாய்ப்பு தொடர்பில் இதன்போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் 5 வீரர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டமை மற்றும் அவர்களுக்கு பொருத்தமான வீரர்களை அணிக்கு இணைத்துக் கொள்ளும் வாய்ப்பான (RTM) என்ற வாய்ப்பை கோரிய போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் அடுத்த அமர்வின் போது இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஐ.பி.எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.