ஆர்ஜன்டீன நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருக்கலாம் என அச்சம்!

Friday, 24 November 2017 - 7:34

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%21+
காணாமல் போன ஆர்ஜன்டீன நீர்மூழ்கி கப்பலின் பணியாளர்கள் யாரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
44 பேருடன் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த வாரம் புதன்கிழமை காணாமல் போய் இருந்தது.
 
இதனை அடுத்து வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகி இருப்பதாக ஆர்ஜன்டீனாவின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் இந்த கப்பல் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் குறித்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
 
இதனால் அந்த கப்பலைச் சேர்ந்த யாரும் உயிருடன் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது.