Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3F
Wednesday, 06 December 2017 - 18:02
இலங்கை அணி வீரர்கள் தொடர்பில் விராட் கோஹ்லி என்ன கூறினார் தெரியுமா??
16,962

Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய 1-0 என்ற கணக்கில் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

போட்டியில், இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சில் 536 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 246 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
 
 இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதற்கமைய,  இலங்கை அணிக்கு  410 ஓட்டங்கள் வெற்றி  இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

அதன்படி , களமிறங்கிய இலங்கை அணி இன்றைய ஐந்தாவது நாள் நிறைவின் போது 5 விக்கட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன்படி , இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய த சில்வா உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வௌியேறும் போது 119 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ரொஷான் சில்வா ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடராட்ட நாயகன் விருது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த போட்டித் தொடர் தனிப்பட்ட ரீதியில் எனக்கு மற்றும் எனது அணி வீரர்களுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.

தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் எவ்விதமான சவால்களையும் எதிர்க்கொள்ள முடியும்.

தான் அணியின் தலைமைப் பதவியை பெற்றிராத போது , அணியினுள் காணப்படும் சிரமங்கள் மற்றும் தலைவர் ஒருவர் முகங்கொடுக்க வேண்டிய சவால்களை அறிந்திருக்க வில்லை.

இதன்போது , ரோஷித் சர்மா தொடர்பிலும் விராட் கோலி கருத்து தெரவித்திருந்தார்.

அவர் மத்திய தர வரிசை வீரர் என்ற வகையில் போட்டியை மாற்றக்கூடியவர்.

அவரின் துடுப்பாட்ட முறை தொடர்பில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் , அனைத்து வீரர்களுக்கும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் தமது திறமையை வௌிப்படுத்த முடியாது என கோஹ்லி தெரிவித்திருந்தார்.

இதேவேளை , இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதாக கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி ஒரு இலக்கை நோக்கி செல்கின்றமை மற்றும் அவர்களின் நம்பிக்கையை இந்த போட்டித் தொடரில் தான் அவதானித்தாக விராட் கோஹ்லி மேலும் தெரிவித்தார்.

இறுதி நாளான இன்று இலங்கை அணி வீரர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்கிய போதும் , எமது அணி வீரர்களுக்கு விக்கட்டுக்களை கைப்பற்ற எவ்வித வாய்ப்புக்களையும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை , இந்த போட்டித் தொடரில் விராட் கோஹ்லி சாதனையொன்றை பதிவு செய்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளின் தலைவர்களில் அதிக இரட்டை சதங்களை பெற்றுள்ளமை குறித்த சாதனையாகும்.

கோஹ்லி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 6 இரட்டை சதங்களை பெற்றுள்ளார்.

இதேவேளை, ஒரு வருடத்தினுள் 2818 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோஹ்லி இந்த போட்டித் தொடரில் படைத்துள்ளார்.

46 போட்டிகளில் பெற்றுக்கொண்ட இந்த ஓட்டங்களில் 11 சதங்கள் அடங்குகின்றன.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி எதிர்வரும் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

அதன்படி , இந்திய அணித்தலைவராக குறித்த போட்டிகளுக்கு ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
609 Views
19,520 Views
1,778 Views
1,018 Views
25 Views
21,303 Views
Top