Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
Thursday, 07 December 2017 - 10:01
புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சாவகச்சேரி நகர சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது
1

Shares
126

Views
யாழ்ப்பாணத்தில் நேற்று புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டணி, சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வலி கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அனந்தராஜா ஆகியோரே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழரசுக் கட்சி கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாதென தெரிவித்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டமைப்பொன்றை அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்தக் கூட்டணியானது வடக்கு, கிழக்கில் உள்ள சகல உள்ளாட்சி சபைகளிலும் போட்டியிட ஆயத்தமாவதாக வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அனந்தராஜா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி எதிர்வரும் 13ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், சாவகச்சேரி நகரசபையில் போட்டியிட இதுவரை ஆறு கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
717 Views
6,996 Views
6,013 Views
14,081 Views
403 Views
8,509 Views
Top