ஐ எஸ் தீவிரவாதிகள் மீதான போர் முடிவு - ஈராக் அறிவிப்பு

Sunday, 10 December 2017 - 8:59

%E0%AE%90+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான போர் பிரகடனம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக ஈராக் அறிவித்துள்ளது.
 
விசேட ஊடக சந்திப்பொன்றின் ஊடாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
 
ஐஎஸ் தீவிரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் பிரகடனத்தின் பிரகாரம் ஈராக் மற்றும் சிரிய எல்லைகள் தீவிரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக ஹைதர் அல் அபாடி குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈராக் மற்றும் அண்டைய நாடுகளின் நிலப்பிரதேசங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், அந்த நிலப்பரப்புக்களில் இருந்த பாரம்பரியமான வரலாற்று தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
 
ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் லட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் அறிவித்துள்ளன.