சிரியாவில் வன்முறைகள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள குழந்தைகளை வெளியேற்றுமாறு கோரிக்கை

Monday, 11 December 2017 - 8:04

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சிரியாவின் தமஸ்கஸ் பகுதியில் வன்முறைகள் இடம்பெறும் பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவான யுனிசெப் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடுமையாக வன்முறைகள் இடம்பெற்றுவரும் கோட்டா பகுதியில் ஐந்து குழந்தைகள் மரணமடைந்துள்ளதாகவும், மேலும் 137 குழந்தைகள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஏழு மாதம் தொடக்கம் 17 வயது வரையான சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறைகளால், அவர்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை இல்லாது போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிலை மேலும் மோசமடைந்துவருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமாராக 4 லட்சம் பேர் வரையில் வசிக்கும் கோட்டா பகுதியில் அனைத்து மக்களுக்கும் பாரிய மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.