வெற்றியை நோக்கி எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களை மௌனமாக்கிய இலங்கை வீரர்கள்

Monday, 11 December 2017 - 8:58

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

தர்மசாலாவில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 38.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் மகேந்திரசிங் தோணி 65 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்று கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் எவரும் குறிப்பிடத்தக்க ஓட்டங்களை பெறவில்லை.

பந்துவீச்சில் சுரங்க லக்மல் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

113 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 20.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் சுரங்க லக்மல் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது.