பும்ராவை தேடிச் சென்ற தாத்தாவுக்கு நேர்ந்த சோகம்

Monday, 11 December 2017 - 10:19

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்திய கிரிக்கட் அணியின் வீரர் பும்ராவைப் பார்க்கச் சென்ற அவரது தாத்தா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தை சேர்ந்தவர்.

இவரது தாத்தா சன்டோக் சிங். வயது 84. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தம் சிங் நகரில் வசித்துவந்தார்.

இவர் தனது பேரன் பும்ராவை பார்க்க வேண்டும் என்றும் இறப்பதற்குள் பேரனை கட்டி அணைக்க வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக கூறி வந்தார்.

ஊடங்களிலும் பேட்டிக் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு சொந்த ஊரில் இருந்து கிளம்பிச் சென்றார் சிங்.

அவர் எங்கு சென்றார் என்று தெரியாததால் குடும்பத்தினர் காவற்துறையில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

'பும்ராவை சந்திக்கக் கூடாது என்று பும்ராவின் அம்மா (மருமகள்) கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.