கஜினி மாகாணத்தில் இடம்பெற்ற மோதலில் பலர் பலி

Monday, 11 December 2017 - 13:19

%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தான் கஜினி மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் மரணித்தனர்.

கஜினி மாகாணம் காராபாக்கிலுள்ள சோதனைச் சாவடி மீது தலீபான் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் 8 தீவிரவாதிகளும் 3 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நங்கர்ஹார் மாகாணமத்தில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கத்தை ஒழித்து 16 ஆண்டுகள் ஆகியுள்ளபோதும் அங்கு தொடர்ச்சியாக தலீபான்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.