பிரபல நகைச்சுவை நடிகர் தீடீர் தற்கொலை!!

Monday, 11 December 2017 - 16:51

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21%21++
தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் விஜய் சாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் விஜய் சாய்.

இவர் தனது ஹைதராபாத் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு வயது 32.

படுக்கை அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் தான் தற்கொலை செய்து கொள்ளும்போது செல்ஃபியாக காணொளி எடுத்து வைத்துவிட்டு இறந்துள்ளார்.

அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் நிறைய கடன் சுமைகளால் திண்டாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்த அவர் தனிமையில் சிக்கிக் தவித்துள்ளார்.

அவரது மனைவி இவரிடம் இருந்து கூடுமான தொகைகளை பெற்றுக் கொண்டு பிரிந்து போனதால் இவரது வாழ்க்கை தரமும் கொஞ்சம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

தனக்கு என்று உள்ள ஒரே மகளை காண முடியாததால் அவரது மனநிலை மோசமடைந்து வந்துள்ளது.

இந்நிலையில்தான் மனம் ஒடிந்துப்போய் இன்று காலை தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார் விஜய் சாய்.

இவர் பதிவு செய்து வைத்துள்ள காணொளியை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

விஜய் தன் காணொளியில் தற்கொலைக்கு தனது மனைவி, அவரது வழக்கறிஞர், இயக்குநர் சசிதர் ஆகியோர்தான் காரணம் எனக் கூறியுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

விஜய் சாயின் வீடு ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.

அவரது தற்கொலையை அறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

விஜய் சாய், சித்தார்த் - ஜெனிலியா நடிப்பில் வெளியான பொம்மரிலு படம் உட்பட பல படங்களில் நகைச்சுவை நடிகனாக வலம் வந்தவர்.