யேமன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வழி செய்து கொடுக்க வலிறுத்தல்

Tuesday, 12 December 2017 - 12:41

%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
யேமனில் நோய்கள் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையற்ற வகையில் மனிதாபிமான உதவிகளை வழங்க யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் வழிசெய்து கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

நிலவும் யுத்த சூழல் காரணமாக யேமனில் 84 லட்சம் மக்கள் பஞ்சம் மற்றும் நோய் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, தங்குமிடம், சுகாதாரம், குடிநீர், ஊட்டச்சத்து போன்ற தேவைகளை பூர்த்திசெய்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள வானூர்தி தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் சிரிய எல்லைகளை முற்றுகையிட்டுள்ளன.

இதன் காரணமாக யேமன் நாட்டிற்குள் உட்புகுவதற்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

சவுதி அரேபியாவின் இந்த முற்றுகைகளை சற்று அகற்றிக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் வலியுறுத்திவருகின்றன.