இலங்கை கிரிக்கட்டின் விசேட பொது கூட்டம் ஜனவரியில்

Tuesday, 12 December 2017 - 18:17

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++
இலங்கை கிரிக்கட்டின் விசேட பொது கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான 3 காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விளையாட்டு சட்டத்திற்கு அமைவாக இலங்கை கிரிக்கட் இற்கான யாப்பினை உருவாக்கிகொள்வதற்கும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் மொஹான் டி சில்வா குறித்த செயலாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு உப தலைவராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து வெற்றிடமாக காணப்படும் புதிய செயலாளர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதும் காரணங்களில் ஒன்றென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜயந்த தர்மதாச உப தலைவர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்தே முன்னாள் செயலாளர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.