O/L பரீட்சை எழுத வந்த மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!!

Wednesday, 13 December 2017 - 8:37

O%2FL+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21%21
2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் வைத்தியசாலை ஒன்றிலிருந்து பரீட்சையை எழுதியுள்ளார்.

இவர் நேற்றைய தினம் இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீகொடை மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத உந்துருளி மூலம் அநுஷ மதுரங்க என்ற மாணவர் தனது சகோதரனுடன் புறப்பட்டுள்ளார்.

இவர்கள் பரீட்சை நிலையத்தினை அண்மித்த வேளையில், அவர்களுக்கு பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று மோதியமையினால் இருவரும் விபத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த அநுஷவிற்கு ஹோமாகம வலய கல்வி அலுவலகத்தின் பரீட்சை கண்காணிப்பாளர் ஒருவரின் விசேட மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதுவதற்கான அனுமதி கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவரின் தாய் கருத்து தெரிவிக்கையில்..