2வது ஒருநாள் போட்டி- இலங்கை இந்திய அணிகளில் மாற்றம்?

Wednesday, 13 December 2017 - 8:30

2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%3F+
இலங்கை இந்திய இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
இந்த போட்டி மொஹாலி சண்டிகார் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இணைக்கப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
கடந்த போட்டியில் எந்தவித ஓட்டங்களை பெறாது ஆட்டமிழந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா, சதீர சமரவிக்ரம, தனஞ்ஜய டி சில்வா ஆகிய வீரர்களில் ஒருவர் இணைத்து கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இரண்டு அணிகளுக்கிடையே முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை , இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல இன்றைய போட்டியில் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வாராயின் , அவர் தனது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடிப்பார்.

இவர் தற்போதைய நிலையில் 30 ஓருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் , அதில் 979 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இரண்டு சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்கள் உட்பட அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.