இன்றைய போட்டி வரலாற்றில் இடம்பிடிக்குமா?

Wednesday, 13 December 2017 - 10:08

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
இந்த போட்டி மொஹாலி சண்டிகார் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்து இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இலங்கை அணி இதற்கு முன்னர் விளையாடிய 12 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்விடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் சுகயீனமுற்றிருந்த நிலையில் அவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த போட்டியில் எந்தவித ஓட்டங்களை பெறாது ஆட்டமிழந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னவுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா, சதீர சமரவிக்ரம, தனஞ்ஜய டி சில்வா ஆகிய வீரர்களில் ஒருவர் இணைத்து கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997 ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் எவற்றிலும் வெற்றிப்பெறவில்லை.

1997ம் ஆண்டு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான தொடரொன்றை கைப்பற்றியிருந்தது.

இதேவேளை , இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெறுமாகவிருந்தால் இந்தியாவினுள் முதல் ஒருநாள் தொடர் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்து வரலாற்றில் இடம்பிடிக்கும் நிலையில், 20 வருடங்களின் பின்னர் இந்தியாவுக்கு எதிரான தொடரொன்றை இலங்கை கைப்பற்றும் என கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டவாது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30க்கு ஆரம்பமாகவுள்ளது.